பந்தயத்தில் ஓடி வெற்றி பெற்ற குதிரைக்கு, தான் எவ்வாறு வெற்றி பெற்றேன் என்று தெரியாது.... ஆனால் குதிரையை ஓட்டிச் செல்பவனின் அடியும் அவன் அக்குதிரைக்கு அதிகமாக கொடுக்கும் வலிகளுமே ஒரு குதிரையை வெற்றி பெறவைக்கிறது.... அதே போல் எமது வாழ்க்கையில் அதிகமான துன்பங்களை அனுபவிக்கும் போது நினைவில் வரவேண்டியது எமக்கு வெற்றிக்கான சந்தர்ப்பம் மிக அருகில் வந்துவிட்டது என்பதே.
வணக்கம் உறவுகளே, வலைப்பதிவுக்கு புதியவன் என்றாலும் பல வலைப்பதிவுகளை வாசித்து பின்னூட்டம் இட்டிருக்கிறேன்.எவ்வளவு காலம் தான் இப்படியே பின்னூட்டம் விட்டுக்கொண்டிருப்பது என்று, இன்று ஒரு வலைப்பதிவுக்கு சொந்தக்காரன் ஆகிவிட்டேன்.உங்கள் பின்னூட்டம் என்னை எழுத்து துறையில்(தடுக்கி விழவைத்தாவது) காலூன்ற ஊக்குவிக்கும் என்ற நம்பிக்கையுடன்,இன்று நானும் ஒரு வலைப்பதிவுக்கு சொந்தக்காரன்.
தலைப்பில் கண்ணீரை வைத்துவிட்டு அதை பற்றி சொல்லாவிட்டால்..... ஒரு முறை "இன்று ஒரு தகவல்" புகழ் அமரர் தென்கச்சி கோ. சுவாமிநாதனிடம் இதழாளர் ஒருவர் "தென்கச்சி அவர்களே நீங்கள் குறுங்கதை மூலம் மக்களை சிரிக்க வைகிறீர்களே குறுங்கதை மூலம் மக்களின் கண்களை கலங்கவைக்க முடியுமா?" என்று கேட்டார், அதற்கு அமரர் தென்கச்சி கோ.சுவாமிநாதன் அவர்கள், "மக்களின் கண்களை கலங்க வைக்க குறுங்கதை எல்லாம் தேவையில்லை ஒருவரி போதும் அதுதான் "ஈழதமிழர்கள்" " என்று சொன்னார். உண்மையிலேயே அதை படித்தவுடன் என் கண்களில் நீர்கசிந்தது..... இன்று அந்தமக்கள் படும் துன்பங்கள்,இன்னல்களை பார்க்கும் போது கண்ணீரல்ல,அதற்கு நானும் ஒரு காரணமாக இருந்தேன் என்று இரத்தம் கசிகிறது.....இன்று அமரர் தென்கச்சி கோ.சுவாமிநாதன் இல்லை என்றாலும், அவர் சொன்ன இந்த வார்த்தை மட்டும் அவரின் மேல் இன்னும் மரியாதையை அதிகரிக்கிறது. அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கும் அதே வேளை; அவரின் இழப்பால் துன்பப்படும் மனைவி,மகள்,குடும்பத்தினருக்கு எனது அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
எமது நிலையும் அந்த பந்தயக்குதிரை போலத்தான் ஏன் தோற்றோம்? எதற்கு தோற்றோம்? என்று கூட தெரியாமல் இன்னல் மேல் இன்னல் அனுபவித்துக்கொண்டு இருக்கிறோம்... இந்த இன்னல் எல்லாம் எம்மை மீண்டும் தலை நிமிர வைக்கும் என்ற நம்பிக்கையில்....
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக